மதுரை:

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை ஜூன் 4ந்தேதி வரை  கைது செய்ய மதுரை உயர்நீதி மன்றம் கிளை திருச்சி காவல்துறைக்கு தடை விதித்து உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து, சீமான் உள்பட  8 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட பல பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி, சீமான் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,  சம்பவம் நடக்கும் போது அந்த பகுதியில் தான் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 6 பேரை ன் 4 ம் தேதி வரை கைது செய்ய கூடாது என தடை விதித்தார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையையும் ஜூன் 4ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.