மதுரை
காவல்துறையே இந்து முன்னணியைக் கண்டு அஞ்சும் நிலை உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணியின் தஞ்சை மாவட்டச் செயலாளராக குபேந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர் தனது உள்ளாடைகளைக் கழட்டிக் காட்டி, மகளிர் காவலரிடம் தகராறு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
குபேந்திரன் இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே அவர் இதை எதிர்த்து தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
அவர் ஜாமீன் கோரிய மனுவை மீண்டும் ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்ததாகவும், தற்போது காவல்துறையே பார்த்து அஞ்சும் அளவிற்கு மோசமாகி விட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.
[youtube-feed feed=1]