மதுரை
மதுரை உயர்நீதிமன்றம் குண்டர் தடை சட்டத்தின் கீழ் கூல் லிப் விற்பனையாளர்களை ஏன் கொண்டு வரக்கூடாது என வினா எழுப்பி உள்ளது.
மதுரை உயர்நீத்மன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு கூல், லிப் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகினர் . அவர்கள் தமிழகத்தில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது எனவும் இதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினர்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்”தமிழகத்தில் எந்த குட்கா தயாரிப்பிற்கும் அனுமதி இல்லை. எனவும்பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது எவும்ன தெரிவித்தனர்.
நீதிபதி,
“தற்போது கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களை பாதிக்க கூடிய அளவிற்கு விற்பனையும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?”
என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப் பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.