துரை

ன்னை மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனம் என சொல்லக் கூடாது என நித்யானந்தாவுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி தடை விதித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் புதிய ஆதீனமாக நித்யானந்தாவுக்கு முன்பு பதவி வழங்கப்பட்டது.  சில நாட்களுக்குப்   பிறகு தற்போதைய ஆதீனம் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட பதவியை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.     அதையொட்டி மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் நித்யானந்தா மதுரை ஆதீன மடத்தின் உள்ளே நுழையக்கூடாது எனவும், அவர் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது எனவும் தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு நித்யானந்தா தான் மடத்தின் 293 ஆவதுஆதீனம் எனவும்,  மடத்தில் ஒருமுறை ஆதீனமாக பொறுப்பேற்பவர் என்றும் ஆதீனமாகவே பதவியில் இருப்பார் என பதில் அளித்திருந்தார்.   இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது.  அதில், “ மதுரை ஆதீனத்தின் 292 ஆவது ஆதீனம் இன்னும் உயிருடன் இருக்கிறார்.   எனவே நித்யானந்தா தன்னை 293ஆவது ஆதீனம் என சொல்லிக் கொள்ள முடியாது.   மேலும் இவரை ஆதீனமாக நியமித்த அறிவிப்பை தற்போதைய ஆதீனம் திரும்பப் பெற்று விட்டார்” எனத் தெரிவித்தது.

அதை தொடர்ந்து நீதிபதி இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதில், “நித்யானந்தா இனியும் தன்னை 293ஆவது ஆதீனம் என சொல்லிக் கொள்ளக் கூடாது.   ஏற்கனவே தான் 293ஆவது ஆதீனம் என தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.   தவறினால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.   வழக்கு வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது