மதுரை
பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் முன் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் வருடம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா புதுக்கோட்டம் மாவட்டம் திருமயத்தில் காவல்துறையினரிடம் பேசும் போது உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசி உள்ளார். இதையடுத்து அவர் மீது பல இடங்களில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தாம் இந்த வழக்கில் கைதாவதைத் தவிர்க்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச் ராஜா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று எச் ராஜாவின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனப் பரவலாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் எச் ராஜாவின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவை அளித்துள்ளது.