மதுரை:
மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் மின்மிகை மாநிலம் என்று அரசும் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அவ்வப்போது மின் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில்,நேற்று வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததது.
மதுரையில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் வேலை செய்யாத நிலையில் தொடர்ந்து சில மணி நேரம் மின்சாரம் இல்லாத காரணத்தால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் கடுமையான பாதிப்படைந்தனர்.
நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மின் தடை காரணமாக அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இது குறித்து தெரியவந்ததும் மருத்துவமனையில் இருந்த அவர்களது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறும்போது, “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என விசாரணை நடத்தப்படும் என்று கூறி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அவ்வப்போது மின் ஏற்பட்டு வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மீண்டும் தினசரி மன்தடை ஏற்படுமோ என்று அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.