பிரளயநாதர் திருக் கோயில்.,சோழவந்தான் ,  மதுரை மாவட்டம்

இந்த கோயில் எங்கு உள்ளது?

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் அமைந் துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

மதுரையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் சோழவந்தான் என்னும் ஊர் உள்ளது. சோழ வந்தானில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக் கோயில் அமைந் துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்தில் மூலவர் பிரளய நாதராகவும், அம்பாள் பிரளய நாயகியாகவும் கிழக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக் கின்றனர்.

இக்கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக் கென தனித்தனி சன்னதிகள் அமைந் துள்ளன. இவ்விரு சன்னதி களுக்கு எதிரில் நந்திகள் அமைந் துள்ளன.

பிரளயநாதர் சன்னதி கோஷ்டத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய தட்சிணா மூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கிய வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கின்றனர்.

இத்தலத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகன், லட்சுமி மற்றும் அனுமன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக் கின்றனர்.

பிரளய நாதருக்கு இடது புறத்தில் எட்டு கைகளுடன் விஷ்ணு துர்க்கை காட்சி தருகிறார். விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய்க் கிழமை தோறும் ராகு கால நேரத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்து வழிபாடு செய் கின்றனர்.

இங்கு சுவாமி சன்னதிக்கு எதிரில் நவகிரகம் மற்றும் பைரவர் ஆகியோரின் சன்னதிகள் அமைந் துள்ளன. இந்த பைரவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய் கின்றனர்.

வேறென்ன சிறப்பு?

சுவாமிக்கு பின்புறத்தில் இத்தல ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சியளிக் கிறார். இவருக்கு சனிக்கிழமை தோறும் வெண்ணெய் சாற்றி வழிபாடு செய் கின்றனர்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய முக்கியமான தலமாக இத்தலம் விளங்கு கிறது.

இத்தல விநாயகர், பாலகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலை படைத்து வழிபாடு செய் கின்றனர்.

இத்தல முருகப் பெருமான் மிகவும் விசேஷ மானவர். இவருக்கு கந்த சஷ்டியின் போது ஆறு நாட்களும் சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது. சஷ்டிக்கு அடுத்த நாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து “திருப் பாவாடை தரிசனம்” என்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப் படுகிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப் படுகிறது?

மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மேலும் பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகிறது.

எதற் கெல்லாம் பிரார்த் தனைகள் செய்யப் படுகிறது?

வழக்கு களில் வெற்றி பெறவும், தீராத வியாதிகள் குணமடை யவும், இக்கட்டான சூழ்நிலை யிலிருந்து விடுபடவும், திருமணத் தடை நீங்கவும், மாங்கல்ய தோஷம் நீங்கவும் இத்தலத் தில் பிரார்த் தனை செய் கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக் கடன்கள் செலுத்தப் படுகிறது?

இக்கோயிலில் வேண்டு தல்கள் நிறை வேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்