மதுரை:
அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட, மதுரை தினகரன் அலுவலகம் அழகிரி ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி உள்பட 9பேருக்கு ஆயுள் தண்டனையை மதுரை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு தினகரன் செய்தித்தாளில், கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஸ்டாலினுக்கே மக்கள் செல்வாக்கு என்றும், அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்றும் கூறப்பட்டி ருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி, தனது ஆதரவாளர்கள் மூலம் மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தீயில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. வழக்கில் தொடர்புடைய மதுரை பிரபல ரவுடி அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கின் . வழக்கு விசாரணை ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில், அட்டாக் பாண்டி உள்பட 9 பேரை விடுதலை செய்து கிழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ரத்து செய்தது. குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது மதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.