என்னிடம் பொறுப்பு கொடுத்தால் ஒரே நாளில் பெட்ரோல் விலையை ரூ.40ஆக மாற்றுவேன்: பாஜகவினருக்கு டி.ஆர்.பாலு சவால்….

Must read

ஸ்ரீபெரும்புதூர்:

பொறுப்பை என்னிடம்  கொடுத்தால் மறுநாளே பெட்ரோல் விலையை ரூ.40ஆக மாற்றுவேன், ஆனால், பாஜகவினரால் இதை செய்ய முடியாமா? என்று  என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு சவால் விடுத்தார்.

அடுத்த மாதம் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு  தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று  வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் குரோம்பேட்டையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர்.பாலு,  தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அநியாயமாக உயர்ந்து வருகிறது… சென்னையில்,  1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது இது  இது நியாயமான விலை கிடையாது என்றவர்…

இதற்கான காரணம் எனக்குத் தெரியும்..  ஏனென்றால் நான்  1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன் என்றவர், என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படையுங்கள்… அடுத்த நாள் காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுகிறேன்,  அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கூறியவர்,  பா.ஜனதாவினரால் அது முடியுமா? என்று சவால் விட்டார்.

More articles

Latest article