மதுரை:
கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா இறப்பால் துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல்,அதில் நடைபெறும் முறைகேடுகளையும் அகற்றும் வகையிலும் பொது நல ஆர்வலர்கள் மூலம் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து (தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில்) இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக எரியூட்டப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 24 மணி நேரக் கட்டுப்பட்டு அறை எண். 842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]