மதுரை,
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட திருத்தம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர்களான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என விழாக்குழவினர் அறிவித்துள்ளனர்.
காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் 500 காளை கள், 300 வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
கிராம விழாக்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 22ந்தேதி அலங்காநல்லூரில் வாடிவாசல் திறந்து வைப்பேன் என்று கூறிய தமிழக முதல்வரை, ஊருக்குள் வரவிடாமல் திருப்பி அனுப்பிய, அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் விழா கமிட்டியிர் தெரிவித்து உள்ளனர்.
அதுபோல பாலமேட்டில் பிப்ரவரி 2ம் தேதிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.