மதுரை: மதுரையில் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்ககப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்த பிரதமர், கலாசார காவலர்கள் யார் என்பது குறித்து தேர்தலி பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு ஆதரவு கோரி மதுரையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட பாஜக தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பாஜக – அதிமுக கூட்டணியின் 36 வேட்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நேற்று மாலை மதுரை வந்தடை பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி சட்டையிடன் இரவு மீனாட்சியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலை பிரகாரத்தையும், மண்டபத்தையும் சுற்றிப்பார்த்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த பிரதமருக்கு, கோவில் தலைமை பூசாரி பூரண கும்ப மரியாதை செய்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் அப்போது, “மதுரைக்கு வணக்கம்” “நல்லா இருக்கீங்களா?” என தமிழில் பேசி உரையைத் துவக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ”மதுரை வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகளை தரிசித்தேன். நான் ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன். மதுரை புண்ணிய பூமி, வீர பூமி. மிச்சமுள்ள என் வாழ்நாள் முழுவதும் மீனாட்சி கோயிலின் நினைவுகளில் மூழ்கி இருப்பேன். மதுரை, தமிழ் பண்பாட்டின், நாகரிகத்தின் தொட்டில். சங்கம் வளர்த்த மதுரை, ஞானம் வளர்த்த மதுரை, தமிழ் வளர்க்க வரும் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.
மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்.. தமிழ் கலாச்சாரத்தின் மையப்புள்ளி மதுரை மாநகர். அன்னை மீனாட்சியின் ஆட்சியில் இருக்கும் இந்த மண்,புண்ணியத்தையும்,வீரத்தையும் ஒருங்கே வைத்திருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். கூடல் அழகர் கொழுவீற்றிருக்கும் இந்த மண் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது, மாலோன் மருகன் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் மண் என்றென்றும் சிறப்பு வாய்ந்தது.
உலகின் பழமையான சங்கத் தமிழ் மொழியை வளர்த்த பூமி மதுரை. காந்தியை மகாத்மாவாக மாற்றிய இந்த மண், முத்துராமலிங்கத்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்த கொடை பூமி. மதுரை ஒன்றுபட்ட இந்தியாவின் குறியீட்டு பூமி. குஜராத்தில் இருந்து வந்த சௌராஷ்டிரத்தை சேர்ந்தவர்களும், தெலுங்கு மக்கள் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஒன்றாக வாழும் மண். தமிழகத்திற்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கும் இருந்த தொடர்பு என்றென்றும் மறக்க முடியாதது. அவருடைய “மதுரை வீரனை” மறக்க முடியுமா? அவருக்கு பாடல் பாடிய TMS பிறந்த இந்த மண்ணை மறக்க முடியுமா? 1980ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அரசை காங்கிரஸ் கலைத்த போது, எம்ஜிஆர் மதுரை மேற்கில் நின்றுதான் மீண்டும் வென்றார்.1977,1980,1984 மூன்று முறை அவரை அரியணையில் வைத்து அழகு பார்த்த மண் இது…
தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்று மார்தட்டிச் சொல்லும் திமுகவும், காங்கிரஸ் பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரமாக இருக்கும் ஜல்லிகட்டை தடை செய்தது ஏன்? “ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான விஷயம்” என்று சொன்னவர் காங்கிரஸ் கூட்டணி தலைவர் சொன்னார். ஜல்லிகட்டு காட்டுமிராண்டி நிகழ்வா? அப்படிச் சொன்னவர்கள் தான் தமிழ் கலாசார காவலர்களா?
அதிமுக அரசு ஜல்லிக்கட்டை கொண்டு வர மசோதாவை கொண்டு வந்தது. அதை பாஜக அரசு ஆதரித்து சட்டமாக கொண்டு வந்து ஜல்லிகட்டு என்கிற தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்த கலசார காவலர்கள் தான் எங்கள் கூட்டணி. ஆனால், ஜல்லிக்கட்டை தடை செய்த திமுக காங்கிரஸ், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்த எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ்க்கு பேசுவதற்கு சரியான திட்டம் இல்லை. அவர்கள் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்தின் பாதுகாவலர்களாக சித்தரித்து கொள்கிறார்கள். அது உண்மை அல்ல.
தங்கள் ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்காத இவர்கள் இன்று அதை கொண்டுவந்த எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும். மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்1 மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று நான் உறுதிமொழி அளிக்கிறேன்”.
தமிழகத்தில் நீர் பாசனம், சாலை உள்ளிட்ட உள் கட்டுமான வசதிகளுக்கு அதிகமாக செலவிடப்பட்ட உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் நிறைய திட்டங்கள் அளிக்கப்படும். நாடு முழுவதும் வைஃபை சேவை விரைவில் அளிக்கப்படும்.
சுந்தரேஸ்வரர் திருவிளையாடல் நடந்த மண் மதுரை.நீருடன் உள்ள தொடர்பை திருவிளையாடல் மற்றும் மதுரை உணர்த்துகிறது. அதற்காகவே தண்ணீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு உள்ளன. மத்திய மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரமும் தடையில்லா தண்ணீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையில் வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஒடும். எங்களை வெற்றி பெற செய்தால், மிக அதிகமான திட்டங்கள் வரும் என்று அர்த்தம். விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வர்த்தகத்தை சுலபமாக மாற்ற பல சீர் திருத்தங்களைச் செய்து வருகிறோம். வரி என்கிற பெயரில் வரி கொடுமை இருக்க கூடாது என்பதல்ல வரி சுமையை குறைத்து கொண்டிருக்கிறோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 7 ஜவுளி பூங்கா வர உள்ளன. 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ், திமுக நினைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தது பாஜக அரசு. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும். சரியான நடைமுறையில் உறுதியாக வரும். மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழியில் படிக்கும் வசதியை அமல் படுத்தி உள்ளோம்.
மதுரை தூங்கா நகரம் என புகழ்பெற்ற நகரம். இந்த மதுரை அரசியல் முக்கியத்துவத்தைக் கொடுப்பதிலும் தூங்காத நகரம், அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதில் கூட தூங்காமல் இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.