மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடம் அடிக்கல்லுடன் நின்று போனதை அடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இதற்கான நிரந்தர கட்டிடம் கட்ட எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ராமநாதாபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் பயின்று வருவதால் இவர்களுக்குத் தேவையான பயிற்சி உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மீண்டும் வாடகைக்கு இடம் பார்க்கப்படுகிறது. திருமங்கலத்தில் உள்ள செயல்படாத செவிலியர் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.