2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் ஆறாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது.

ஆனால், 1871 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தற்போது சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ், கொல்கத்தா மற்றும் பம்பாய்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக இருந்துள்ளது.

பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியால் 1639 ம் ஆண்டு ஒரு சிறு நிலப்பகுதியில் உருவான மதராஸபட்டினம் பின்பு படிப்படியாக விரிவடைந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளது.

இதில் 1871 ம் ஆண்டு சுமார் 3,97,552 பேர் வாழ்ந்துள்ளனர்.

இன்றைய தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த கணக்கெடுப்பின்படி சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் 76530 பேரும், தஞ்சாவூரில் 52175 பேரும், மதுரையில் 51987 பேரும், சேலத்தில் 50012 பேரும் வசித்துள்ளனர்.

இந்திய அளவில் கொல்கத்தாவில் 7,94,645, மும்பையில் 6,44,405 பேரும் இருந்துள்ளனர்.

லக்னோ, பனாரஸ், பாட்னா ஆகிய நகரங்கள் 4,5,6 இடங்களை பிடிக்க 1,54,417 பேருடன் மக்கள் தொகையில் ஏழாவது இடத்தில் இருந்துள்ளது டெல்லி.