சென்னை:
தமிழகத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னை முழுவதும் கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பு இல்லாததால், 41 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த 20ந்தேதி புதிதாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 21ந்தேதி பாதிப்பு 567 ஆக உயர்ந்தது. 22ந்தேதி 569 ஆக உயர்ந்த நிலையில், இன்று (23ந்தேதி) 624 ஆக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக உயர்துள்ளது.
சென்னையில், இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 4,051பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும்,
5,865 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் கொரோனா பரவல் காரணமாக பல பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் புதிய வழக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்த இடங்கள் இன்று முதல் கட்டுப்பாடற்ற மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.