சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறையினரின் விசாரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை  சிபிஐக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த பட்டப்பகல் கொலை தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் என அறிப்பட்ட சிலர் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. முக்கிய குற்றவாளியிடம் முறையான விசாரணை நடத்தாமல் என்கவுண்டர் செய்த சென்னை காவல்துறையின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறியது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கூறப்பட்ட 27 பேரின்மீது காவல்துறை குண்டாஸ் போட்டது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என குற்றம் சாட்டியதுடன், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரினார்.

இந்த மனுமீதான இறுதி விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு  ஜுலை 25ந்தேதி அன்று நடைபெற்றது. அப்போது,   அரசு வழக்கறிஞர்,   காவல்துறை தரப்பு தங்கள் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், இது அரசியல் கொலை அல்ல என்றும், விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டது.

ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காவல்துறை அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்த காவல் துறை தவறிவிட்டதாகவும் வாதிடப்பட்டது.

ழக்கில் காவல்துறையின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்த நீதிபதி வேல்முருகன்,  பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டது- விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 24ந்தேதி  அன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல்துறைமீது நீதிமன்றம் அதிருப்தி – தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 17 பேரின் குண்டாஸ்-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு…