2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி ரவீந்திரநாத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடித்தார்.

அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் இந்த ஒரு தொகுதியில் மட்டும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.