சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் நிலத்திற்குள் கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம் கட்ட பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு பின்னடை வாக பார்க்கப்படுகிறது.

பள்ளிக்காரனை ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும் விதிகளை மீறி பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும், இதன் மூலம் சட்டத்தைமீறி, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரியல் எஸ்டேட் மோசடி நடைபெற்றுள்ளது என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக அக்டோபர் 24ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் “சென்னை பெரும்பாக்கத் தில் உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) என்னும் தனியார் நிறுவனம், 1,250 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. சதுப்பு நிலப் பாதுகாப்பு ஒப்பந்தம் (ராம்சார் ஒப்பந்தம்) மற்றும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, ராம்சார் நிலங்களில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது. அந்த நிலங்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை.

ஆனால், விதிகளை மீறி கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதா குற்றம் சாட்டியது. மேலும், இதில் அமைச்சர்கள் சிலரும் உடந்தை என்றும் கூறியது.
இந்த நிலையில், ராம்சார் நிலத்தில் திமுகஅரசு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி வழங்கியது எப்படி, என கேள்வி எழுப்பியதுடன், உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் குறித்து அறியாமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கிய எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், பிரிகேட் நிறுவனம் பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதியில் சிஎம்டிஏ எப்படி 1400 குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கியது, இது சட்டவிரோதமானது என்ற கூறியதுடன், பிரிகேட் நிறுவனம், இந்த பகுதியில் குடியிருப்பு கட்டும் கட்டுமான பணிகளை மேற்கெள்ளக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு, பிரிகேட் நிறுவனம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
https://patrikai.com/pallikaranai-ramsar-wetland-violates-rules-commits-rs-2000-crore-real-estate-scam-arappor-iyakkam-allegations-on-dmk-govt/