சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில், நடிகர் சூர்யா கூறிய கருத்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பயத்தில் தமிழகத்தில் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தமிழக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்விசங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சூர்யாமீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். ஆனால் முன்னாள் நீதிபதிகள் பலர், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், பெருந்தன்மையாக விட்டுவிடலாம் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்
இந்த நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள். பொது விவகாரம் குறித்து பேசும் போது கவனம் தேவை. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்க கூடாது. விமர்சனங்கள் நியாய மாக இருக்க வேண்டுமே தவிர, எல்லை மீற கூடாது என அறிவுறுத்தி, நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் கோரிக்கையை நிராகரித்தனர். நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்து உள்ளது.