சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைதைம நிதிபதி ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை, டில்லி, அலகாபாத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக உதவ உயர்வு கொடுத்தி மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இதை குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து,சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது சஃபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றுள்ளனர். அவர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள், தங்களது 2 ஆண்டு பதவிக்காலத்துக்கு பிறகு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.