புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவ பட்டமேற்படிப்புக்கு தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி, என்.எம்.சி. விதிகளுக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தை திரும்பி அளிக்கவும், கட்டணம் தொடர்பாக மாநில அரசு கட்டண குழுவை நியமிக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் மருத்துவப் மேற்படிப்பில், மாணவ, மாணவ, மாணவிகள் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதுபோல,மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக்கட்டணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள் – பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தீர்ப்பில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி யுஜிசி அல்லது என்எம்சி கட்டணங்களை நிர்ணயிக்கும் வரை, 2017-18 முதல் பல்கலைக்கழகங்களாக கருதப்படும் பிஜி மருத்துவ படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க, கட்டணக் குழுவை அமைக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், யுஜிஜி விதிகளின்படி, மாணவர்களிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.