15 வயது சிறுவனுக்கு 17 வயசு சிறுமியுடன் நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. அது மேலும் வலுத்து ஒரு நாள் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பையன் பாலியல் ரீதியாக உறவுவைத்துக்கொள்கிறான். இது பையன் தரப்பு வாதம்.

ஆனால் பெண் வீட்டார் தரப்பில் பாலியல் பலாத்காரம் என்று புகாராக சிறுவனுக்கு எதிராக போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

சிறார்களுக்கான நீதி வாரியம் வழக்கை விசாரித்து, சிறுவனுக்கு மூன்றாண்டு காவல் விதிக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதீஷ் சந்திரா, சிறுவனை விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறார்.

அந்த தீர்ப்பில் அப்படி என்னதான் சொல்லப்படுகிறது?

“டீன் ஏஜ் வயதில் உள்ள ஆணும் பெண்ணுக்கும் இடையிலான எதிர்பாலின மோகத்துக்காக ஒருவரை தண்டிக்கமுடியாது. ஆனால் சிறார் நீதி வாரியம், இரு இளம்பருத்தினரின எதிர்பாலின ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக்கி அதில் ஒருவரை குற்றவாளி என தணடித்துள்ளது.

குழந்தைப்பருவத்திலிந்து இளமை பருவத்திற்கு மாறும்போது உடல்ரீதியான மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்கள் தாக்கம் போன்றவற்றிக்கு அனைவரும் ஆளாக நேரிடும். அப்படிப்பட்ட சூழலில் ஒரு மைனர் பெண்ணுடன் நெருங்கிப்பழகியதற்காக ஒரு சிறுவனை தண்டிப்பது அவனுடைய எதிர்கால நலனுக்கு முற்றிலும் விரோதமான செயல்’’

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

By பி.எல்.வி…