மண்ட்லா:

ஹெராயின் கடத்தல் தொடர்பாக  மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜக எம்.பி.யின்  மகன் உள்பட மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ம.பி. மாநிலத்தில் போதைபொருளான ஹெராயின் அதிக அளவில் நடமாடுவதாக ஏற்பனவே பல புகார்கள் வந்த நிலையில், அதுகுறித்து முந்தைய பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுக்காமல் இருந்து வந்தது.

அங்கு சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்றதும், முதல்வர் கமல்நாத் போதைபொருட்கள் மற்றும் மக்கள் விரோத செயல்களை கடுமையாக ஒடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ம.பி. மாநில பாஜக எம்.பி.யான சம்பத்யை உக்-கின் மகன் சதேந்திரா என்பவர் போதை பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரும் மேலும் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.380 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.