போபால்:
மத்திய பிரதேசத்தில் பணம் அச்சடிக்கும் இடத்தில் ரூ.500 கட்டுகளை திருடி சென்ற அதிகாரி சிக்கினார்.

மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மைய துணை கட்டுப்பாட்டு அதிகாரி மனோகர் தனது ஷூவில் ரூ.500 நோட்டுகளை மறைத்து திருடிச் சென்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் அவரை பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர். அவர் பிடிபட்ட காட்சிகள் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel