போபால்

மத்தியபிரதேசத்தில் கடந்த  8 மாதங்களில் மட்டும் 1122 விவசாயிகள் தற்கொலை  செய்துகொண்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக

அறிவித்துள்ளது.  மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று  

சட்டமன்றத்தில்  இதுவரை அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து காங்கிரஸ் எம் எல் ஏ ராம்நிவாஷ் ராவட் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் புபேந்திரா சிங்,  கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் இந்தாண்டு பிப்ரவரி 27 வரை மொத்தம் 1761 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் அவர்களில் 106 விவசாயிகளும் 181 விவசாயத் தொழிலாளர்களும் அடங்குவர் என்றார்.

மேலும் அவர், கடந்தஆண்டு ஜூலை 1 முதல் நவம்பர் 15 வரை தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 3469 ஆகும். அவர்களில் விவசாயம் சார்ந்தவர்கள் 812 பேர் . ஆக மொத்தம் கடந்த 8 மாதங்களில்  தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 5230 என்றும தெரிவித்தார்.  இவர்களில் விவசாயிகளும் , விவசாயத் தொழிலாளர்களும் மட்டும் மொத்தம் 1112 பேர் என்பது குறிப்பிடத்தக்கது..