சென்னை:

ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதணன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் மருதகணேஷ், அதிமுக சார்பில் தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் அணி சார்பில்  அதிமுக அவைத் தலைவர் மதுசூதணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். ஆட்சி மன்ற குழுவில் எடுத்த முடிவின் படி மதுசூதணன் வேட்பாளாக நிறுத்தப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்ஜிஆரால் ‘மது’ என்று பாசத்துடன் அழைக்கப்பட்டவர் மதுசூதணன். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். கடந்த 91-96ம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். அதனால் இவர்களும் தேர்தல் கமிஷனிடம் இரட்டை இலை சின்னத்தை கோரவுள்ளனர். அதேசமயம் தினகரனும் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று கோரவுள்ளார். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷன் கையில் தான் உள்ளது.