புதிய இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் மீண்டும் இணைகிறார் மாதவன். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறார்.
மாதவன், ஐஸ்வர்யாராய் கடந்த 2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய “குரு” படத்தில் இணைந்து நடித்தனர் மாதவனும்,அதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ன்றனர்.
பாலிவுட் இயக்குனரான அதுல் மஞ்ச்ரேக்கர், “பேனி கான்” என்ற படத்தை இயக்க உள்ளார். இதில், ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்க உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அக்ஷ்ய் ஓபராயை நடிக்க கேட்டதாவும், அவர் மறுத்ததை தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் பேனி கான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.