
‘அமெரிகி பண்டிட்’ என்கிற திரைப்படத்தில் மாதவன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் மாதவன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறியுள்ளார்.
அந்த விமானத்தில் வேறு யாரும் பயணிக்கவில்லை . தனி ஒருவராக விமானப் பயணம் மேற்கொண்டது குறித்து மாதவன் காணொலி ஒன்றைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.
இது என் வாழ்வின் தனித்துவமான தருணமாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆச்சரியமாக ஆனால் வருத்தமாக இருக்கிறது. அன்பு மிக்கவர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்திருக்க, இந்தச் சூழல் முடியவேண்டும் என்று கடுமையாகப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CSa9BCBFXuS/
Patrikai.com official YouTube Channel