தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி.
இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து மாதவன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
ஆனால் தற்போது இதற்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். “இயக்குநர் லிங்குசாமியுடன் பணியாற்ற்றி மீண்டும் அந்த மாயத்தை உருவாக்க ஆர்வமாக இருக்கிறேன். அவரும் மிக இனிமையான மனிதர். துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வந்திருக்கும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை” என்று மாதவன் ட்வீட் செய்துள்ளார்.