சுரேஷ் காமாட்சி தயாரிபில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.

அதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி ‘மாநாடு’ படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2 ஆம் நாள் காலை 11.25 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை இயக்குனர் ஏ. ஆர். முருகதாசும், மலையாள டிரெய்லரை நடிகர் நிவின் பாலியும், தெலுங்கு டிரெய்லரை நடிகர் நானியும், கன்னடத்தில் ரக்ஷித் செட்டியும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில், மாநாடு படத்தின் பிற மொழிகளுக்கான டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “பிற மொழிகளுக்கான புதிய டைட்டில் நாளை ட்ரைலர் வெளியிடும்போது தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.