சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது படக்குழு ப்ரீ ரிலீஸ் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு திரைப்படத்தின் இந்த டிரெய்லரும் மிரட்டலாகவே அமைந்திருக்கிறது.

ஆக்ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத இந்த ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

யுவனின் பின்னணி இசை மாஸாக உள்ளது. இன்றைய தினம் இந்த படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலரையும் வெளியிட்டு சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.