சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லையில், பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லையில் 2 நாள் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்றும், நாளையும் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியம் திறப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.
இந்த மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி திருநெல்வேலியில் இன்று காலை 6 மணி முதல், நாளை மாலை 6 மணி வரை ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களைப் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையின் வாழ்வாதாரமான, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் அரிய தொல்பொருட்களை கண்டெடுக்கப்பட்டன. அவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் இன்று திறக்கிறார்.
[youtube-feed feed=1]