யோகிபாபு நடிப்பில் ஆவிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி’.

அனுசரண் இயக்கியுள்ள இந்த படத்தில் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்கதுரை உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.

ரவி முருகையாவின் கதைக்கு இயக்குனர் அனுசரண் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களில் வெளியிட லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலகின் 11:11 புரடக்ஷன் நிறுவனம் கைகோர்த்துள்ளதாக 11:11 சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]