ஆண்டிகுவா: இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 375 ரன்கள் இலக்கை விரட்டிவரும் விண்டீஸ் அணி, கடைசி நாளில், முதல் செஷன் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களை எடுத்து, இன்னும் 284 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அந்த அணி வெற்றிபெற, 62 ஓவர்களில் 284 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று, சீராக ரன்களை சேர்த்துவந்தால், விண்டீஸ் அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதேசமயம், அடுத்த சில விக்கெட்டுகளை விரைவாக இழக்கும்பட்சத்தில், டிரா செய்வதே பெரும்பாடாகிவிடும். பிராத்வெய்ட் மற்றும் கேம்ப்பெல் ஆகிய துவக்க வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அவுட்டாகிவிட, தற்போது நிக்ருமா 50 ரன்களுடனும், மேயர்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை, ஒயிட்வாஷ் செய்து வென்ற விண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.