லக்னோ:

உ.பி. மாநிலத்தில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில், இருந்து அங்கு வசித்து வரும் சுமார் 30 பேரை குரைத்து வெளியேற்றிய நன்றியுள்ள ஜீவன், அதே தீயில் சிக்கி பரிதாபமாக உயரிழந்தது. அந்த அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.மாநிலம் பாந்தா என்ற பகுதியில் உள்ள 4மாடி கொண்ட குடியிருப்பில் நேற்று நள்ளிரவு திடீரென தீ பிடித்தது. அங்கு வசித்து வந்த ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான நாய், இதை கண்டதும் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தும்.

குறிப்பிட்ட ஒரு இடத்தை பார்த்து நாய் குரைத்ததை கண்ட வீட்டுக்காரர் மற்றும் அக்கம் பக்கத்தினர், குடியிருப்பு பகுதியில் உள்ள  பர்னிச்சர் ஷோரூமில்  தீ பிடித்து எரிந்ததை கண்டனர். உடனடியாக அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறினர்.

தீயானது பர்னிச்சர் கடையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கும் பரவியது. அப்போது அங்கிருந்த  சிலிண்டர் தீ பிடித்து வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் மக்களை காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவனான நாயும் சிக்கிக்கொண்டு தனது உயிரை விட்டது.

இதுகுறித்து தகவல்அறிந்த  சம்பவ இடத்திற்கு போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து, தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்புவாசிகளை காப்பாற்றிய நாய், அதே தீயில் கருகி இறந்தது அங்குள்ள மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.