சென்னை :
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாதம் ஒருமுறை திறுத்தப்படுகிறது.
கடந்த இரு மாதங்களாக திருத்தப்படாமல் ரூ. 734 ல் இருந்த சமையல் எரிவாயு விலை, இந்த மாதம் ரூ. 881 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தற்பொழுது உள்ள விலையில் இருந்து ரூ. 147 உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தவிலையேற்றம் இருப்பதாக அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மானியம் இல்லா சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ. 881 (உயர்வு 147) டெல்லி ரூ. 858.50 (144.50) கொல்கத்தா ரூ. 896 (149) மும்பை ரூ. 829.50 (145) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்த மானியம் இல்லா விலை கொடுத்து வாங்கி பின் அரசின் மானியத்திற்காக காத்திருக்கும் சாமானியர்களை வெகுவாக பாதிக்கும் என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.