டெல்லி: நாடு முழுவதும் சமையல் வேலைகளுக்கு தேவவையான சமையல் எரிவாயுகளை எண்ணை நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், இனிமேல் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு, பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, எண்ணை நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.

எல்பிஜி சிலிண்டர்  விற்பனையில் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒரு குடும்பத்தில், அதிக பட்சமாக  வருடத்திற்கு 15 சிலிண்டர்களை மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுபோல ஒரே மாதத்தில் அதிகபட்சமாக  2 சிலிண்டர்களுக்கு மேல் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது குறைந்த பட்சம்  15 முதல் 20 நாட்களுக்கு மேல் எல்பிஜி சிலிண்டர் புக் பண்ண முடியும். ஆனால், இனிமேல் அந்தமாதிரி புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இதன் காரணமாக,  இனிமேல்,  அதிக பட்சமாக குடும்பம் ஒன்றுக்கு,  ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.

முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆண்டுக்கு  15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு அதுகுறித்த  SMS அனுப்பப்பட்டு வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணை நிறுவனங்களின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.