சென்னை:
டீசல் விலை உயர்வால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வந்து நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
இருப்பினும், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகளாகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.
சேலம் மாவட்ட ஆத்தூர் சந்தையில் 6 விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.