தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகம் உள்பட நாடு முழுவதும பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை, தென்மேற்கு பருவமழை கால கட்டத்தில், தென் தமிழகத்தில் 13 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.