சென்னை:
த்தியஅரசு  அனுமதிவழங்கி உள்ள புதிய கல்விக்கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து  விவாதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
மத்தியஅரசு கடந்த 2019ம் ஆண்டு புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவை வெளியிட்டது. பின்னர், அதில் பல்வேறு திருத்தங்களைக்கொண்டு  புதிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து,  புதிய கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஜூலை மாதம் 29ந்தேதி அன்று வெளியிட்டது.
அதில், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மேலும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும்  உள்பட பல்வேறுஅதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவாதித்த முடிவு செய்யப்படும் என அறிவித்த தமிழக அரசு, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர், புதிய கல்வி தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.ஏ.செங் கோட்டையன், கே.பி.அன்பழகன் மற்றும் தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில்,  புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.