டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல்வர் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. இதற்கிடையில்,வங்கக்கடல், அரபிக்கடல்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளமண்டல சுழற்றி காரணமாக தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறியது. மேலும், அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) உருவாகி இருக்கிறது.
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் அக்.24, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் 26-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை. விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.