சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. என்று  மத்தியஅரசு மீது  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்ட 2006 இல் ஒருநாள் ஊதியம் ரூ.65 ஆகவும்,படிப்படியாக உயர்ந்து 2014 இல் ரூ.148 ஆகவும் வழங்கப்பட்டது. இது போன்ற திட்டங்களால் 10 ஆண்டுகளில் 14 கோடி மக்கள் வறுமைப் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர்.

ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமாக ரூ.383 அளிக்க வேண்டுமென்ற பரிந்துரையை பா.ஜ.க. அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை.

100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது.

தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.