புதுடெல்லி:

குறைவான பண வீக்க விகிதம் மற்றும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் விவசாய பிரச்சினை பூதாகரமாக இருந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து மிகவும் அச்சம் அடைந்தனர்.

மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில், கடந்த மாதம் பணவீக்கம் 2.5 சதவீதமாக இருந்தது.

உணவு மற்றும் ஆல்கஹால் இல்லாத பானங்கள் இந்தியா நுகர்வோர் சந்தையில் வழக்கம்போலவே இருந்துள்ளன. இந்த எதிர்மறையான பணவீக்கம் பொதுவாக சில பொருட்களுக்கு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானியங்கள்,பழங்கள், காய்கறிகள் போன்ற விவசாயப் பொருட்களும், இறைச்சி, முட்டை, பால் போன்ற விலங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

2018 -ம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பண வீக்க விகிதம் 13.2 சதவீதமாக குறைந்துள்ளது. சர்க்கரை 1 6 சதவீதமாக குறைந்துள்ளது. பழங்கள் 4.18 சதவீதமாக குறைந்துள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு உருளைக்கிழங்கு,
சர்க்கரை ஆகியவற்றின் விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

உணவு மற்றும் வர்த்தகக் கொள்கை காரணமாக பணவீக்கம் மற்றும் குறைந்த பணவீக்கம் ஏற்பட்டாலும், விவசாயிகளின் உண்மையான வருமானம் கேள்விக்குறியாகவே உள்ளது.

உணவு உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி தண்டனையாகவே அமைந்திருக்கிறது. தவறான பொருளாதாரக் கொள்கையால் கடந்த ஓராண்டில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை குறைந்த அளவிலேயே வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பாதகமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.