ஸ்ரீநகர்:

40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை  பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது காடி (Adil Ahmad Gaadi Takranewal) என்ற 22வது இளைஞன் என்பதும், சுமார் 350 கிலோ அளவிலான பயங்கர வெடிப்பொருட்களை நிரப்பிய ஸ்கார்பியோ கார் மூலம், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தாக்குதலை நடத்திய தற்கொலை படை பயங்கரவாதி அகமது,  கையில் ரைபிளுடன் நிற்கும்  புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பகுதிக்கு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் பகுதிக்குள் வசித்து வந்தாகவும் கூறப்படுகிறது.

அடில் அகமது காடி தெற்கு காஷ்மீர்  பகுதியில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள குன்டிபாஜ் என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்பதும் அங்குதான் தனது பள்ளிப்படிப்பை படித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ள  மசூர் அசார் தலைமையிலான பயங்கரவாத  இயக்கத்தில் சேர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவார  அமைப்பின் முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முகமது உஸ்மான் என்கிற முக்கியப்புள்ளி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அடில் அகமது தற்கொலை பயங்கரவாதியாக மாறி, இந்த கொடூர குண்டுவெடிப்பை அரங்கேற்றியுள்ளான்.

அடில் அகமது காடி  ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் என்று கூறப்படுகிறது. கடந்த 2017-ல், ஜெய்ஷ்-ன் செயல் தலைவர் காலித் பாரமுல்லாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.