சென்னை:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழல் என கடிதம் எழுதிய வி.சி.க. கட்சி தலைவர் திருமாவளவனுக்கு உருக்கத்துடன் பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

திருமா - ஸ்டாலின் (கோப்பு படம்)
திருமா – ஸ்டாலின் (கோப்பு படம்)

\மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் இன்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்து அதை ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். ஆனால் அக் கூட்டணியில் உள்ள திருமா, தனது தனது கட்சி நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கப்போவதாக அறிவித்தார்.
இதனால் வி.சி.க. முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு திருமா – வைகோ சந்திப்பு நடந்தது. இன்று காலை 10 மணிக்கு தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட இருந்த நிலையில், காலை எட்டு மணிக்கு திருமா முடிவை அறிவிப்பார் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
9
இந்த நிலையில், இன்று காலை திருமா, ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மூன்று தொகுதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நீங்கள் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் கலந்துகொள்ள இயலாது, ஆனால் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது” என்று எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்பு சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு , வணக்கம் தங்கள் கடிதம் கிடைத்திட பெற்றேன்.தங்களின் உள்ள நிலை , உண்மை நிலையை புரிந்து கொண்டேன். அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றதை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்றுத்தேவையை முழுதும் உணர்ந்து , இதை தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகிட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியே , நன்றி , அன்பு மறவா . மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டுள்ளார்.