னியார் தொலைக்காட்சியில், “அசத்தப்போவது யார்” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், பேச்சிலும் பிரபலமானவர். மனைவி வையம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரை தனக்கான் குளத்தில் வசித்துவந்தார்.
13428489_909051145908188_3738255935944359026_n
கடந்த பிப்ரவரி மாதம், 4ம் தேதி, அவர் நிகழ்ச்சி ஒன்றுக்காகவெளிநாடு சென்றிருக்க.. இங்கே அவரது மனைவி வையம்மாள் கார் விபத்தில் பலியானார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவி வையம்மாள் மீது மிகவும் பாசமாக இருந்த முத்து, தன் இரு குழந்தைகளோடு வருத்தத்தோடு வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் மனைவி குறித்து எழுதியுள்ள பதிவு மிக உருக்கமாக இருக்கிறது.  அந்த பதிவு:
“அன்புள்ள நட்புகளே…
மனைவியிடம் அன்பு காட்டி வாழுங்கள். எட்டே ஆண்டுகளில் என் மனைவி இறந்த விடுவாள் என்று எனக்குத் தெரியவில்லை, தெரிந்தால் என் அன்பை அதிகம் காட்டி இருப்பேன்: இன்னும் கொஞ்சி இருப்பேன்.
இறப்பு எல்லாருக்கும் உண்டுதான். ஆனால் என் மனைவிக்கு மட்டும் முப்பதே வயதில்…  என் சின்ன குழந்தைகள் என்ன பாவம் செய்தன?
13413000_909051042574865_8192250662624995289_n
சின்ன மகள், தன்  அம்மாவின்  பொருட்களை எல்லாம் சேர்த்து வைக்கிறாள்.  அம்மா வந்ததும் தருவாளாம்..! என்ன செய்ய.. ?
ஒவ்வொரு நாளும் சாகலாம் என்று இருக்கிறது…
இந்த இரண்டு குழந்ததைகள் மட்டும் இல்லை என்றால் எப்போது என் மனைவிடம் போயிருப்பேன்.
நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் மக்களை சிரிக்கவைக்கும் என்னால் ஒரு நாள்…   ஒரு நிமிடம் சிரிக்க முடியவில்லை..
என் முதல் ரசிகை போய்விட்டாள்..
என் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் தொலைந்துவிட்டது…..!
அன்புள்ள நட்புளே…  மனைவியிடம் அன்பு காட்டி வாழுங்கள்!”