காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பொறுக்க முடியாத பெண் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று செய்த செய்ய தற்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நூலில் ஒரு மருத்துவரிடம் செவிலியராக பணி புரிந்த போயா வசுந்தரா (34) என்ற பெண் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மற்றொரு மருத்துவரை காதலித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென அந்த ஆண் மருத்துவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா தனது முன்னாள் காதலனை பழிதீர்க்க திட்டமிட்டார்.

தனது நெருங்கிய தோழியான செவிலியர் கொங்கே ஜோதி (40)-யிடம் உதவிகேட்ட வசுந்தரா, தனக்கு எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளியின் ரத்தத்தை வாங்கித்தர கூறியுள்ளார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் ரத்தத்தை கொங்கே ஜோதி வாங்கித் தந்துள்ளார்.

HIV வைரஸுடன் கூடிய அந்த ரத்தத்தை பதப்படுத்தி வைத்த வசுந்தரா தகுந்த சமயம் பார்த்து காத்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வரும் மருத்துவரான தனது முன்னாள் காதலனின் மனைவியை குறிவைத்த வசுந்தரா அவரை நோட்டமிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து சாப்பிடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த உதவி பேராசியரின் இரு சக்கர வாகனத்துடன் மற்றொரு வாகனத்தை மோத வைத்து அவரை கீழே விழ வைத்துள்ளார்.

பின்னர், அவருக்கு உதவுவதாகக் கூறி அவரை ஆட்டோவில் ஏற்றும் போது தான் கொண்டு வந்த HIV ஊசியைப் போட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அலறியதால் வசுந்தரா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து கர்னூல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளின் மூலம் வசுந்தரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னாள் காதலனை பழிவாங்க அவரது மனைவிக்கு HIV ஊசி போட்ட விவகாரம் தற்போது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]