பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையின் போது அரசு அதிகாரிகள் இல்லங்களில் இருந்து ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பலர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்தன.  இதையொட்டி லோக் ஆயுக்தா காவல்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.  அவ்வகையில் பெங்களூரு மின்சார வாரிய தலைமை பொறியாளர் மீதும் புகார் எழுந்துள்ளது.

எனவே பெங்களூரு மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரமேஷ் தொடர்பான இடங்களில் லோக் ஆயுக்தா காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.  இந்த சோதனை கர்நாடகா முழுவதும் உள்ள 15 உயர் அரசு அதிகாரிகள் தொடர்பான 53 இடங்களில் நடந்துள்ளது.

சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு லோக் ஆயுக்தா அதிகாரிகளே அதிர்ந்து போய் உள்ள்னர். 

குறிப்பாக பெங்களூரு மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் ரமேஷ் இடம் இருந்து மட்டும் 4 இடங்களில் ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க வெள்ளி நகைகள் ரூ.4.20 கோடி சொத்து ஆவணங்கள்,  ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.