டில்லி

த்திய அரசின் விவசாய நிதி உதவி  யார் யாருக்கு  கிடைக்காது  என்பதை  அரசு அறிவித்துள்ளது.

இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ. 6000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொகை மிகவும் குறைவானது என காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 17 மட்டுமே ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினார்கள்.

ஆனால் தற்போது அரசு கொடுத்துள்ள விவரங்களின் படி அந்த குறைந்த தொகையைப் பெறவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்த உதவித் தொகை பலருக்கு அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவற்றை இங்கு காண்போம்

முன்னாள் மற்றும் இன்னாள் அரசு பணியாளர்களான ஆளுநர்கள், தேர்தல் ஆணையர்கள், மத்திய அல்லது மாநில அரசில் பணி புரிந்த மற்றும் ஒய்வு பெற்றவர்கள், பொதுத் துறை மற்றும் தன்னுரிமை பெற்ற நிறுவனங்களில் பணி புரிந்த மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை கிடையாது. இந்த ஊழியர்களில் கடை நிலையான நான்காம் நிலை பணியாளர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

ஓய்வூதியமாக ரூ.10000 க்கு மேல் வாங்குவோருக்கு உதவித்தொகை கிடையாது.  ஒரு முறை வருமான வரி செலுத்தி இருந்தாலும் இந்த உதவித் தொகை வழங்கப்பட மாடாது.   நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை இன்னாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களுக்கும் முன்னாள் தலைவர்களுக்கும் உதவித் தொகை கிடையாது.

மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் போன்ற தொழில் துறை வல்லுனர்களுக்கு உதவித் தொகை கிடையாது. இந்த உதவித் தொகைக்கான தகுதி 2019 ஆம் தேதி பிப்ரவரி 1 ஆம் தேதிய நிலையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது.

அதன் பிறகு புதியதாக பயனாளிகளை சேர்க்க 5 வருடங்களுக்கு இதில் மாறுதல் ஏதும் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் பயணாளிஅளை நீக்க 2018 டிசம்பர் 1 மற்றும் 2019 ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.