சென்னை

சென்னையில் நடந்த இளையராஜா 75 நிகழ்வில் பல பிரபலங்கள் பங்கேற்கவில்லை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்னும் நிகழ்வு இரு தினங்கள் நடந்தது.   இதில்  பிரபல நட்சத்திரங்களான, ரஜினிகாந்த், கமலஹாசன், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன் பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் வந்தனர்.   ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரகுமான் வந்து கலந்துக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதே நேரத்தில் இந்நிகழ்வில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர்.   அதிலும் முன்னணி  நட்சத்திரங்களான அஜித், விஜய், சூரியா, தனுஷ் , ஜீவா,  ஜிவி பிரகாஷ், அதர்வா, சந்தானம், சசிகுமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சமந்தா, த்ரிஷா, ஹன்சிகா, காஜல், அமலா பால் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுக்கு வரவில்லை.

தற்போதைய முன்னணி இயக்குனர்கள் பலரும் விழாவுக்கு வராததும்  வியப்பளித்தது.    பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், யேசுதாஸ், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், மற்றும் பாடகிகள், எஸ் ஜானகி , பி சுசிலா, உள்ளிட்ட பலரும் நிகழ்சியில் பங்கேற்கவில்லை.   பல தயாரிப்பாளர்களும் விஷால் மீதான அதிருப்தியால் வரவில்லை என சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரபலம் ஒருவர், “இளையராஜாவின் இசையால் மட்டுமே பல படங்கள் ஓடி உள்ளன. அத்துடன் அவர் இந்திய சினிமாவின் பொக்கிஷம் என பலரும் கூறி வருகின்றனர்.   அதே நேரத்தில் இந்த விழாவில் அவர்கள் கலந்துக் கொள்ளாதது ஒரு குறையாகவே தோன்றுகிறது.   மூத்த கலைஞர்களுக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.